பிரதமருக்கு அக்மால் சவால்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 20: இரண்டு மாநிலத் தேர்தல்களில் பெரிகாத்தான் நேஷனலுடன் ஒத்துழைக்க கூட்டணி முடிவு செய்ததைத் தொடர்ந்து, பாரிசான் நேஷனல் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று பக்காத்தான் ஹரப்பான் இளைஞர் பிரிவு விடுத்த அழைப்புக்கு, அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சலே பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு சபா மாநிலத் தேர்தலில் ஷாஃபி அப்தால் தலைமையிலான வாரிசான் கட்சி, பக்காத்தானுக்கு எதிராகப் போட்டியிட்டதால், அந்த ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து வாரிசான் கட்சியும் வெளியேற வேண்டும் என்று பக்காத்தான் ஹரப்பான் இளைஞர் பிரிவு கோரிக்கை விடுக்க வேண்டும் என அக்மல் கூறினார்.

சரவாக் மாநிலத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதில் சரவாக் கட்சி (Gabungan Parti Sarawak) பக்காத்தான் ஹரப்பானுக்கு எதிராகப் போட்டியிட்டால், கூட்டாட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என்ற இதே கோரிக்கையை சரவாக் கட்சியும் (Gps) எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இல்லையென்றால், பாரிசான் நேஷனல், வாரிசான் மற்றும் சரவாக் கட்சிகளின் அனைத்து அமைச்சர்களையும் துணை அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்யுமாறு பிரதமருக்கு  தாம் சவால் விடுவதாக அக்மால் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *