அக்மாலுக்கு வழங்கப்பட்ட 2 நிபந்தனைகள்! சொல்லியும் கேட்காத அக்மால்
- Shan Siva
- 05 Jan, 2026
கோலாலம்பூர். ஜான் 5:
கடந்த சனிக்கிழமை அம்னோ இளைஞர் மாநாட்டை ஏற்பாடு செய்ய டாக்டர் அக்மால் சலேவுக்கு
அனுமதி வழங்கப்பட்டபோது அம்னோ இரண்டு நிபந்தனைகளை விதித்ததாக அம்னோ தலைவர் ஒருவர்
தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை
அரசாங்கத்திலிருந்து விலகுவது குறித்து விவாதிப்பதைத் தவிர்ப்பதும், பிரதமர்
அன்வார் இப்ராஹிம் மீது எந்த விமர்சனமும் இருக்கக்கூடாது என்பதும்தான் அந்த நிபந்தனை
என்று சம்பந்தப்பட்ட அம்னோ முக்கிய தலைவர் கூறியதாக FMT செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த உறுதிமொழியின்
அடிப்படையில்தான் அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி திட்ட நடவடிக்கைகளுக்கு
ஒப்புக்கொண்டார் என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
அக்மால் மாநாட்டில் எழுப்பிய
விஷயங்கள், அதாவது அம்னோ அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது, பாஸ் உடன் மீண்டும் இணைவது அல்லது அதன் அரசியல் விசுவாசத்தை மாற்றுவது போன்றவை
ஜாஹிட்டுடன் ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை என்று வட்டாரம் கூறியது.
அவர் அத்தகைய
கருத்துக்களை ஆதரிப்பதில்லை, அங்கீகரிப்பதில்லை அல்லது ஏற்றுக்கொள்வதில்லை என்று
வட்டாரம் தெரிவித்தது. அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது குறித்து எந்த
அறிவுறுத்தலையும் அல்லது உத்தரவையும் ஜாஹிட் பிறப்பிக்கவில்லை என்றும் அந்த
வட்டாரம் கூறியது.
அக்மால் மாநாட்டைத் தொடங்கியபோது, பேரவை ஜாஹிட்டால் அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறினார். ஒற்றுமை
அரசாங்கத்திலிருந்து வெளியேறுமாறு அடிமட்ட உறுப்பினர்களின் அழைப்புகளை ஆதரிப்பதாக
ஜாஹிட் தன்னிடம் கூறியதாகவும் அவர் கூறினார்.
மாநாட்டை நடத்த ஜாஹிட்
ஆசி தனக்கு கிடைக்கவில்லை என்றும்,
கட்சித் தலைமைக்கு
எதிராகச் செயல்படுவதாகவும் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக
அக்மால் இவ்வாறு கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



