கோயிலுக்கு எதிராகக் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! – FIRDAUS WONG வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 13,

அரசு நிலங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டிருக்கும் கோயில்களை அப்புறப்படுத்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சர்ச்சைக்குரிய மத போதகர் FIRDAUS WONG நகராணமைக் கழகத்தை வலியுறுத்தினார். அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டுமானங்களைக் கட்டினால் நகராண்மைக் கழகம் 30 நாள்களுக்குள் அந்த கட்டுமானத்தை இடிக்க வேண்டும். 30 நாள்களுக்குள் கட்டுமானத்தை அப்புறப்படுத்த தவறினால் சம்மந்தப்பட்டவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறையும் RM500,000 வரையில் அபராதமும் விதிக்க வேண்டும் என 1965 ஆண்டி தேசிய நிலச் சட்டத்தின் பிரிவு 425 வலியுறுத்துகிறது. 

ஆனால் பெரும்பாலானக் கோயில்கள் நோட்டிஸ் வழங்கப்பட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அரசியல்வாதிகளாலும் குண்டர் கும்பலாலும் பாதுகாக்கப்பட்டு வருவதாக FIRDAUS WONG தெரிவித்தார். பகாங்கில் உள்ள ஒரு கோயில் அரசு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 மே மாதம் அந்த கோயிலை அப்புறப்படுத்த வேண்டும் என நகராண்மைக் கழகம் நோட்டிஸ் வழங்கியும் கோயிலை அப்புறப்படுத்தாமல் சட்டவிரோதமாக அங்கே வழிபாடுகள் செய்யப்படுகிறது என FIRDAUS WONG சுட்டிக்காட்டினார். 

சோம்பேறிகளாகவும் திறமையற்றவர்களாகவும் நகராண்மைக் கழகங்கள் செயல்படுகிறது என்றும் அதிகாரிகள் தொடர்ச்சியான நடவடிக்கையை மேற்கொள்ளாமல் இருக்க அவர்களை அரசியல்வாதிகள் தடுக்கிறார்களா என FIRDAUS WONG கேள்வி எழுப்பினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *