கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை

top-news
FREE WEBSITE AD

சென்னை, செப். 15 –

கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. இவர் தனது குடும்பத்தினருடன் கொளத்தூரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி அதிகாலை அவருக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சையைத் தொடங்கினர்.

சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வரும் வி.எஸ்.பாபு, தற்போது பல்துறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு தேவையான மருத்துவ மேலாண்மை மற்றும் சுவாச ஆதரவு சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *