ஜொகூரில் பக்காத்தான் ஹராப்பான் மாநாடு
- Surendran Sumdraraj
- 08 May, 2026
கோலாலம்பூர், மே 8-
அடுத்த மாநிலத் தேர்தல் மற்றும் 16ஆவது பொதுத்தேர்தலை முன்னிட்டு, அரசியல் ஒற்றுமையையும் தேர்தல் பணிகளையும் வலுப்படுத்தும் நோக்கில் பக்காத்தான் ஹராப்பான் (PH) 2026 மாநாடு அடுத்த வார இறுதியில் ஜொகூர் பாருவில் நடைபெறவுள்ளது.
PKR தகவல் பிரிவு தலைவர் டத்தோ பஹ்மி பட்சில், அமானா துணைத் தலைவர் அட்லி ஜஹாரி மற்றும் டிஏபி துணைத் தலைவர் ஷாரெட்சான் ஜோஹான் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், மே 17ஆம் தேதி ஜொகூர் பாருவில் உள்ள பெர்சாடா சர்வதேச மாநாட்டு மையத்தில் இந்த மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மடானி உறுதி, மக்களின் நம்பிக்கை” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாடு, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்வது மற்றும் மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பது போன்ற அம்சங்களை மையமாகக் கொண்டு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



