அமெரிக்க மகளிர் ஓபன் கோல்ஃப் சாம்பியன் பட்டம் வென்றார் நெல்லி கோர்டா
- Surendran Sumdraraj
- 08 Jun, 2026
லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூன் 8–
உலகின் நம்பர் ஒன் கோல்ஃப் வீராங்கனையான Nelly Korda, தனது நீண்டகால கனவை நனவாக்கி அமெரிக்க மகளிர் ஓபன் (U.S. Women's Open) கோல்ஃப் தொடரின் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றியுள்ளார்.
ரிவியாரா கன்ட்ரி கிளப்பில் நடைபெற்ற இறுதிச்சுற்று ஆட்டத்தில், நெல்லி கோர்டா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி மொத்தம் எட்டு அண்டர் பார் 276 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். போட்டியின் 17-ஆவது குழியில் அவர் பெற்ற முக்கியமான ‘பேர்டி’ வெற்றியை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றியது.
இறுதிச்சுற்றில் இரண்டு அண்டர் பார் 69 புள்ளிகளைப் பதிவு செய்த கோர்டா, இங்கிலாந்தின் Charley Hull மற்றும் மெக்சிகோவின் Gaby Lopez ஆகியோரின் கடும் சவாலைச் சமாளித்து வெற்றி பெற்றார். இருவரும் ஏழு அண்டர் பார் 277 புள்ளிகளுடன் போட்டியை நிறைவு செய்தனர்.
இந்த வெற்றியின் மூலம் நெல்லி கோர்டா தனது முதல் அமெரிக்க மகளிர் ஓபன் பட்டத்தையும், வாழ்க்கைப் பயணத்தின் நான்காவது மேஜர் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார். மேலும், இந்த ஆண்டில் அவர் வென்ற இரண்டாவது மேஜர் பட்டமாகவும் இது அமைந்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற Chevron Championship தொடரிலும் அவர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



