வாழ்க்கைச் செலவு உயர்வு: திருமணம், குழந்தைப் பெறுவதை தள்ளிப்போடும் இளைஞர்கள் – நான்சி சுக்ரி
- Surendran Sumdraraj
- 07 Sep, 2026
கூச்சிங், செப். 7 –
நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, இளைஞர்கள் திருமணம் மற்றும் குழந்தைப் பெறுவது தொடர்பான முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க காரணமாக இருப்பதாக பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.
இன்றைய இளைஞர்கள் திருமண வாழ்க்கைக்குள் நுழைவதற்கு முன் பொருளாதார நிலை, மாதாந்திர செலவுகள், குடும்பத்தை நிர்வகிக்கும் திறன் மற்றும் எதிர்கால நிதி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை விரிவாக திட்டமிடுவதாக அவர் கூறினார்.
குடும்பத்தை தொடங்குவதற்கு முன் தாங்கள் நிதி ரீதியாக தயாராக உள்ளோமா என்பதை இளைஞர்கள் அதிகம் சிந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இளைஞர்களின் இந்தக் கவலைகளை அரசு புரிந்துகொள்வதாகக் கூறிய நான்சி, திருமணத்திற்குத் தயாராகும் தம்பதிகளுக்கு உதவ பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
அவற்றில் ‘ஸ்மார்ட் ஸ்டார்ட்’ திட்டத்தின் மூலம் குடும்ப வாழ்க்கை, குடும்ப பொறுப்புகள், பொருளாதார மேலாண்மை மற்றும் நிதித் திட்டமிடல் தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



