போலிசாரைத் தாக்கிய பெண் கைது! இஸ்லாமியர்களைத் திட்டியதாக வழக்கு!
- Thinagaren Sanggaren
- 01 Jan, 2026
ஜனவரி 1,
வணிக வளாகத்தின் வாகனம் நிறுத்தும் இடத்தில் பெண் ஒருவர் காவல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொருள்களைக் காவல் அதிகாரியை நோக்கி எறியும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட பெண்ணைக் காவல்துறை கைது செய்திருப்பதாக Kota Setar மாவட்டக் காவல்துறை தலைவர் Syed Basri Syed Ali தெரிவித்தார். ந்ண்பகல் 1.11 மணிக்கு அலோர் ஸ்டாரில் உள்ள வணிக வளாகத்தில் கூச்சலிட்ட பெண்ணைக் கட்டுப்படுத்த முயற்சித்த காவல் அதிகாரிகள் அவரிடம் அடையாள அட்டையைக் கேட்ட போது அவர் கூச்சலிட்டு காவல் அதிகாரிகளின் மீது எச்சில் துப்பியதாகவும் இஸ்லாம் மதம் குறித்து தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் நம்பப்படுகிறது.
இது தொடர்பானக் காணொலி பொதுமக்களால் சமூகவலைத்தலங்களில் பகிரப்பட்ட
நிலையில் சம்மந்தப்பட்ட 34 வயது பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு
வருவதாக Kota Setar மாவட்டக் காவல்துறை தலைவர் Syed
Basri Syed Ali தெரிவித்தார். சம்பவ இடத்தில் பெண் காவல் அதிகாரிகள் இல்லாததால்
கூச்சலிட்ட பெண்ணைக் காவல் துறையினர் கைது செய்யாமல் பின் தொடர்ந்ததாகவும் அதன் பின்னர்
பிற்பகல் 2.30 மணிக்குப் பெண் காவல் அதிகாரிகள் அவரைக் கைது செய்ததாகவும் தற்போது அவர்
மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டு வருவதாகவும் Kota Setar மாவட்டக்
காவல்துறை தலைவர் Syed Basri Syed Ali தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



