சரவாக், லபுவானில் RON95 மற்றும் டீசல் பயன்பாட்டுக்குக் கடும் கட்டுப்பாடு

top-news
FREE WEBSITE AD

கூச்சிங், ஏப். 1-

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்வாதாரச் செலவு அமைச்சு (KPDN), சபா, சரவாக் மற்றும் லபுவான் பகுதிகளில் RON95 பெட்ரோல் மற்றும் டீசல் மானிய எரிபொருள் பயன்பாட்டை இன்று முதல் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை, மானிய எரிபொருள் கசிவு மற்றும் தவறான பயன்பாட்டை தடுக்கவும், பொதுமக்களுக்குப் போதுமான அளவில் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்படுவதாக KPDN அமலாக்க இயக்குநர் டத்தோ ஸ்ரீ அஸ்மான் அடாம் தெரிவித்ததார்.

 புதிய விதிமுறைகள் வாகன வகைகளின் அடிப்படையில் எரிபொருள் நிரப்பும் அளவை நிர்ணயிக்கின்றன. தனியார் கார்கள், டாக்ஸிகள், வேன்கள் மற்றும் நான்கு சக்கர இயக்க வாகனங்கள் போன்ற இலகு வாகனங்களுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு 50 லிட்டர் வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்று டன் எடையை மீறாத நடுத்தர வர்த்தக வாகனங்களுக்கு 100 லிட்டர் வரை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், மூன்று டன்னை மீறும் கனரக வாகனங்களுக்கு அதிகபட்சமாக 150 லிட்டர் வரை எரிபொருள் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் எரிபொருள் விநியோகத்தில் ஒழுங்கு ஏற்பட்டு, பொதுமக்களின் நலன் பாதுகாக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *