விலை மற்றும் பொருள் விநியோக குறைகள் – 24 மணி நேரத்தில் விசாரணை: KPDN உறுதி

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மார்ச் 13-

விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து பெறப்படும் அனைத்து புகார்களும் 24 மணி நேரத்திற்குள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு (KPDN) உறுதியளித்துள்ளது.

KPDN அமலாக்கப் பிரிவு தலைமை இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் கூறுகையில், இந்த நடவடிக்கை நுகர்வோருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினைகளை விரைவாகவும் திறம்படவும் தீர்க்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 2024 ஆம் ஆண்டில் KPDN அமைச்சு மொத்தம் 46,815 புகார்களைப் பெற்றுள்ளது. அதேவேளை கடந்த ஆண்டிலும் 46,200க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இந்த எண்ணிக்கை அதிகமாக இருப்பினும், ஒவ்வொரு புகாரையும் முக்கியத்துவத்துடன் எடுத்துக்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க அமைச்சகம் உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.

“புகார்களின் எண்ணிக்கை உண்மையில் அதிகமாக உள்ளது. குறிப்பாக விலை, பொருள் விநியோகம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பான புகார்களை 24 மணி நேரத்திற்குள் விசாரிக்க நாங்கள் உறுதியுடன் செயல்படுகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை உடனடியாக அமைச்சகத்திற்கு அறிவிக்க வேண்டும் என்றும், அதன்மூலம் சந்தை நிலைத்தன்மையைப் பாதுகாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *