KPDN சோதனை: 190 எல்பிஜி சிலிண்டர்கள், லாரி பறிமுதல்

top-news

புத்ராஜெயா, பிப். 16-

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுக் அமைச்சு (KPDN) கடந்த வாரம் காஜாங்கில் நடத்திய சோதனையில் 190 திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) சிலிண்டர்களையும் ஒரு லாரியையும் பறிமுதல் செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 83 ஆயிரத்து 116 வெள்ளி என கணிக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் அமலாக்கப் பிரிவு தலைமை இயக்குநர் அஸ்மான் அடாம் , பிப்ரவரி 9ஆம் தேதி புத்ராஜெயா KPDN அமலாக்க அதிகாரிகள் நடத்திய இந்த நடவடிக்கை, உரிய உரிமம் இல்லாமல் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைச் சேமித்து விற்பனை செய்வதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டது.

ஆரம்ப விசாரணையில், இந்த எரிவாயு வழங்கல் பண்டார் ரிஞ்சிங்கில் உள்ள ஒரு நிறுவனத்திலிருந்து பெறப்பட்டதாக தெரியவந்தது. ஆனால், காஜாங்கில் உள்ள அந்த வளாகத்திற்குக் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைச் சேமிக்க அல்லது விற்பனை செய்ய செல்லுபடியாகும் உரிமம் இல்லாதது உறுதி செய்யப்பட்டது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *