190 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கடத்தல்! லாரி ஓட்டுநர் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 1,

சிலாங்கூரில் எரிவாயு சிலிண்டர்களைக் கடத்தும் கும்பலுடன் தொடர்புடையதாக நம்பப்படும் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதுடன் லாரியிருந்த 190 சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவீனத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இன்று பிற்பகல் 2.10 மணியளவில் சந்தேகத்திற்குரிய லாரி பந்திங்கிலிருந்து Tanjung Sepat நோக்கிச் செல்லும் போது KPDN அதிகாரிகள் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் லாரியின் உள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் சிலாங்கூர் மாநில KPDN இயக்குநர் Muhamad Hanif Asa'ari தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட 190 சமையல் எரிவாயு சிலிண்டர்களின் மதிப்பு RM 56,000 என கணக்கிடப்பட்டிருப்தாகவும், மேலதிக விசாரணைக்காக கைது செய்யப்பட்ட லாரி ஓட்டுநர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சிலாங்கூர் மாநில KPDN இயக்குநர் Muhamad Hanif Asa'ari தெரிவித்தார். சிலாங்கூரின் Banting, Tanjung Sepat, Sungai Pelek. ஆகிய பகுதிகளில் இந்த சமையல் எரிவாயு கடத்தலால் பொதுமக்களும் வணிகர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக சிலாங்கூர் மாநில KPDN இயக்குநர் Muhamad Hanif Asa'ari தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *