பள்ளிகளில் CCTV வசதியை மேம்படுத்த சமூகத்துடன் ஒத்துழைக்கத் தயார்: கல்வி அமைச்சு
- Tamil Malar (Reporter)
- 09 Jan, 2026
புத்ராஜெயா, ஜன. 9-
மலேசிய கல்வி அமைச்சு (KPM), பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா (CCTV) வசதியை நிறுவுதல், பழுதுபார்த்தல் அல்லது மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு உதவ விரும்பும் சமூகத்தின் எந்தத் தரப்பினருக்கும் வாய்ப்பு வழங்கத் தயாராக உள்ளது.
அமைச்சு நடத்திய ஆய்வில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் வெறும் 28.9 சதவீதம் மட்டுமே முழுமையான, இயங்கும் நிலையில் CCTV வசதி கொண்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது.
கல்வி அமைச்சர் படிலீனா சிடெக் கூறுகையில், பள்ளிகளில் CCTV தொடர்பான முன்முயற்சிகளை பெற்றோர்-ஆசிரியர் சங்கம் (PIBG) நிதியுதவி, தனியார் துறையுடன் ஒத்துழைப்பு அல்லது சமூக அளவிலான அரசு சாரா அமைப்புகள் (NGO) ஈடுபாடு உள்ளிட்ட பல்வேறு வழிகளில் செயல்படுத்தலாம் என்றார்.
இந்த அணுகுமுறை, பள்ளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, சமூகப் பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



