அடுத்த வாரம் முதல் பள்ளி சீர்திருத்தத் திட்டம் அமல்: மாவட்டத்திற்கு 10 பள்ளிகள் முன்னோடி திட்டத்தில் தேர்வு

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூலை 28-

கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், பள்ளிகளின் பண்பாடு, கல்விச் சூழல் மற்றும் ஆசிரியர்களின் தொழில்முறை திறனை வலுப்படுத்தும் பள்ளி சீர்திருத்தத் திட்டத்தை (School Reform Programme) கல்வி அமைச்சு அடுத்த வாரம் முதல் அமல்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடேக் கூறினார்.

 இத்திட்டத்தின் முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பள்ளிகள் முன்னோடி (Pilot Project) திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்படும் என்றார். மாணவர்களின் கல்வி அடைவு மற்றும் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐந்து தொடக்கப்பள்ளிகள் மற்றும் ஐந்து இடைநிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த மாவட்டத்தின் சிறந்த பள்ளிகளாக உருவாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பள்ளிக்கும், தேவைகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களின் அடிப்படையில் அதிகபட்சமாக RM100,000 வரை நிதி ஒதுக்கப்படும். இந்த நிதி, கற்றல் சூழலை மேம்படுத்துதல், மாணவர் திறன் வளர்ப்பு, புதுமையான கல்வி முயற்சிகள் மற்றும் பள்ளி நிர்வாகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும்.

இந்த திட்டம் மூலம் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதுடன், ஆசிரியர்களின் தொழில்முறை திறனையும் மேம்படுத்தி, மாணவர்களை எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளத் தயார்படுத்தும் கல்விச் சூழலை உருவாக்க கல்வி அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *