2027 முதல் புதிய பள்ளிப் பாடத்திட்டம்- கல்வி அமைச்சு
- Tamil Malar (Reporter)
- 11 Feb, 2026
கோலாலம்பூர், பிப். 11-
நாட்டின் கல்வி அமைப்பு தொடர்ந்து மாற்றம் பெறும் வகையிலும், எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், கல்வி அமைச்சு (KPM) புதிய பள்ளிப் பாடத்திட்டத்தை அடுத்த ஆண்டு முதல் கட்டங்களாக அறிமுகப்படுத்தவுள்ளதாகக் கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
இதனை விளக்கிய கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ, புதிய பாடத்திட்டத்தின் முதல் கட்டமாக 2027ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளி ஆண்டு ஒன்று (Tahun 1) மற்றும் மேல்நிலைப் பள்ளி படிவம் ஒன்று (Tingkatan 1) மாணவர்களுக்கு அமல்படுத்தப்படும் என்றார். அதன் அடுத்த கட்டமாக 2028ஆம் ஆண்டு, இது ஆண்டு இரண்டு (Tahun 2) மற்றும் படிவம் இரண்டு (Tingkatan 2) மாணவர்களுக்கும் விரிவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
எந்த ஒரு பாடத்திட்டமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தப்படும் என்றும், அந்த காலம் முடிவடைந்ததும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம் என்றும் கூறினார்.
மேலும், தேவையெனில் பாடத்திட்டத்தில் மறுபரிசீலனை நடத்தப்படும் என்றும், சில குறிப்பிட்ட பாடங்களுக்கு காலத்திற்கேற்ப பாடத்திட்ட மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



