10 வயது மாணவி ஆசிரியருடன் ஆபாசமான முறையில் WHATSAPP CHAT! கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கும்!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 7,

பள்ளி மாணவி ஒருவர் தனது ஆசிரியருடன் அதிகாலை 1 மணிக்கு ஆபாசமாக WHATSAPP-இல் குறுஞ்செய்தியை அனுப்பியிருக்கும்படியான செய்திகள் சமூக வலைத்தலங்களில் பரவி வருவதைக் கல்வி அமைச்சு அறிந்திருப்பதாகவும் அது குறித்து தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமும் விசாரணையை மேற்கொண்டிருப்பதாகவும் தகவல் தொடர்பு அமைச்சர் Datuk Fahmi Fadzil தெரிவித்தார்.


16 வயதுக்குற்பட்டவர்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவதற்கான வரம்புகளைக் கட்டமைக்க வேண்டிய அவசியத்தை இது மாதிரியான சம்பவங்கள் நினைவூட்டுவதாக Datuk Fahmi Fadzil தெரிவித்தார்.
கோலாலம்பூரைச் சேர்ந்த ஓர் ஆசிரியர் தனது நன்காம் ஆண்டு பயிலும் 10 வயது பள்ளிச் சிறுமியுடன் அதிகாலை 1 மணி முதல் ஆபாசமாகப் பேசியதாகவும் சம்மந்தப்பட்ட 10 வயது மாணவியும் ஆசிரியரிடம் ஆபாசமானப் புகைப்படங்களைக் கோரியதாகவும் சம்மந்தப்பட்ட 10 வயது மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இது நமக்கான சமிஞ்சை. பாதிக்கப்படும் முன்னரே நாம் விழித்துக்கொள்ள வேண்டும் Datuk Fahmi Fadzil எச்சரிக்கை விடுத்தார். 16 வயதுக்குற்பட்டவர்கள் சமூகவலைத்தலங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதி தகவல் தொடர்பு அமைச்சு உறுதியாக இருப்பதாகவும் Datuk Fahmi Fadzil தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *