உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: விமானத் துறையை நிலைநிறுத்த MOT தீவிர முயற்சி
- Surendran Sumdraraj
- 09 Apr, 2026
புத்ராஜெயா, ஏப். 9-
Kementerian Pengangkutan Malaysia (MOT), உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை முன்னிட்டு, நாட்டின் விமானத் துறையின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இது குறித்து Malaysia Airports Holdings Bhd (MAHB) மற்றும் Civil Aviation Authority of Malaysia (CAAM) ஆகியவற்றுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன என குறித்து அமைச்சர் Anthony Loke தெரிவித்ததார்.
அவர் மேலும் கூறுகையில், அடுத்த வாரம் விமானத் துறையுடன் ஒரு சிறப்பு ஆலோசனை அமர்வு நடத்தப்படும் என்றும், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப துறைக்கு தேவையான ஆதரவு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
“சமீபத்தில் CAAM மற்றும் MAHB உடன் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளேன். விமானத் துறையின் நிலைத் தொடர்ச்சியை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் குறித்து விரைவில் துறையுடன் நேரடி கலந்துரையாடல் நடைபெறும்,” என்று அவர் கூறினார்.
மேலும், இந்த உலகளாவிய எரிசக்தி நெருக்கடி காரணமாக, மக்களை குறிப்பாக தீபகற்ப மலேசியாவில் பொது போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்த ஊக்குவிக்க MOT திட்டமிட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
இந்த நடவடிக்கைகள், நாட்டின் போக்குவரத்து துறையின் சவால்களை சமாளிக்கவும், மக்களின் பயண தேவைகளைப் பாதுகாக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



