“சீமான் மூலம் தமிழ் கற்றேன்” – கீர்த்தி ஷெட்டி பகிர்வு

top-news
FREE WEBSITE AD

சென்னை,

நடிகை கீர்த்தி ஷெட்டி, இயக்குநர் சீமான் மூலம் தான் தமிழ் மொழியை அதிகமாக கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

லைக் பட நிகழ்வில் பேசிய அவர், “சீமான் சாருடன் பேசிக்கொண்டிருந்ததால்தான் நான் தமிழ் பேசுவது அதிகமாகியுள்ளது. அவரிடமிருந்து நான் தமிழ் கற்றுக்கொண்டேன். அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தும் மிகவும் தனித்துவமானவை மற்றும் மேஜிக்கல் போல இருக்கும்,” என்று கூறினார்.

மேலும், அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் ‘செல்ஃபி’, ‘போன்’ போன்ற சொற்களுக்குப் பதிலாகவும் தமிழ் வார்த்தைகளையே சீமான் பயன்படுத்துவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“எந்த விஷயத்தையும் மிகவும் கச்சிதமாகவும் அழகாகவும் தமிழில் சொல்லக்கூடியவர் அவர். அந்த நேரத்தில் அந்த விஷயங்களின் ஆழம் எனக்கு முழுமையாக புரியவில்லை,” என்றும் கீர்த்தி ஷெட்டி தெரிவித்தார்.

இந்த கருத்துகள், தமிழ் மொழியின் அழகையும் அதன் பயன்பாட்டின் முக்கியத்துவத்தையும் மீண்டும் நினைவூட்டுவதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *