மடானி அரசு சொன்னது வேறு! செய்வது வேறு! பெர்சத்து கண்டனம்!
- Sangeetha K Loganathan
- 24 Jan, 2025
ஜனவரி 24,
பண்டிகை காலங்களில் இலவச TOLL வழங்குவது மக்களின் சுமையைக் குறைக்க மட்டுமே என மடானி அரசு புரிந்துக் கொள்ள வேண்டும் என பெர்சத்து கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் Datuk Tun Faisal Ismail Aziz தெரிவித்தார். மடானி அரசு தேர்தலின் போது சொன்னது வேறு, ஆட்சியில் அமர்ந்தது செய்வது வேறாக இருக்கிறது என அவர் சாடினார்.
தேர்தலின் போது இலவச TOLL குறித்தும் TOLLகளை முழுமையாக அகற்றுவதற்கான வாய்சவடால்கள் விட்ட டி.ஏ.பி கட்சி தற்போது அமைதியாக இருப்பது வேடிக்கையானது என அவர் தெரிவித்தார். தற்போது வாழ்க்கை செலவீன விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் மக்களின் சுமையைக் குறைக்க இந்த இலவச TOLL பெரும் பயனாக இருக்கும் என்பதை உணர்ந்து மடானி அரசு 50% மட்டுமே கழிவு வழங்குவது மக்களை ஏமாற்றும் செயல் என ஒற்றுமை அரசாங்கத்தை Datuk Tun Faisal Ismail Aziz கடுமையாகச் சாடினார்.
Datuk Tun Faisal Ismail Aziz mengkritik kerajaan Madani kerana menawarkan diskaun tol 50% sahaja semasa perayaan berbanding janji pilihan raya untuk pemansuhan tol. Beliau mendakwa tindakan ini mengecewakan rakyat yang terbeban kos sara hidup.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



