கோயிலை உடைத்த GARAH கும்பலுக்கு ஆதரவாகப் பாஸ் கட்சியின் இந்தியர் தலைவர்?
- Thinagaren Sanggaren
- 15 Feb, 2026
பிப்ரவரி 15,
பாஸ் கட்சியின் இந்தியர் நலப்பிரிவான DHPPயின் தலைவர் DR BALACHANDRAN கோயில்களுக்கு எதிராக ஒன்றிணைந்திருக்கும் கும்பலுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர்களின் உன்னதமான இந்த போராட்டத்திற்கு முழுமையாக ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார். பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் FADHLI SHAARI, சர்ச்சைக்குரிய சமய போதகர் ZAMRI VINOTH, FIRDAUS WONG, மகாதீரின் முன்னாள் வழக்கறிஞர் HANIFF KHATRI, இஸ்லாமிய மத அமைப்பான PERKID இயக்கத்தின் தலைவர் USTAZ MASRIZI SAD, ஆகியோர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பாஸ் கட்சியின் இந்தியர் நலப்பிரிவான DHPPயின் தலைவர் DR BALACHANDRAN கலந்துகொண்டுள்ளார்.
GARAH எனும் அமைப்பு இந்து கோயில்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்றும், கோயில்களை விருப்பம் போல இடிப்பது எங்கள் நோக்கமல்ல, மாறாக இது நில அபகரிப்பு சம்மந்தப்பட்டது என பாஸ் கட்சியின் இந்தியர் நலப்பிரிவான DHPPயின் தலைவர் DR BALACHANDRAN தெரிவித்தார். சட்டவிரோதமாக அரசு நிலத்திலும் தனியார் நிலத்திலும் அமைக்கப்பட்டிருக்கும் வழிபாட்டுத் தலங்களால் பாதிக்கப்படும் சமூகத்தினருக்கு ஆதரவாகவே GARAH எனும் அமைப்பு செயல்படுகிறது என பாஸ் கட்சியின் இந்தியர் நலப்பிரிவான DHPPயின் தலைவர் DR BALACHANDRAN தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



