பத்ரகாளியம்மன் கோயிலுக்கான மாற்று நிலம் வழங்கப்பட்டது! அரசு உடனடி நடவடிக்கை!
- Thinagaren Sanggaren
- 19 Jan, 2026
ஜனவரி 19,
தலைநகரில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கான புதிய நிலம் தயார்நிலையில் உள்ளதாகப் பிரதமர் துறை கூட்டரசு அமைச்சர் Hannah Yeoh தெரிவித்தார். இன்று தலைநகரில் அமைந்துள்ள கோயிலைக் கூட்டரசு அமைச்சர் Hannah Yeoh, மனிதவள அமைச்சர் Datuk Seri Ramanan, இலக்கவியல் அமைச்சர் Gobind Singh Deo, ஒற்றுமை துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு அரசாங்கம் வழங்கிய புதிய நிலத்திற்கான உரிமையையும் வழங்கினர்.
கோயிலை இடம் மாற்றுவதற்கான அனைத்து வகையிலான சட்ட நடவடிக்கைகளும் முழுமை பெற்ற நிலையில் தற்போது சமயத்தின்படி ஒரு சில வழிபாடுகள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் அதன் பின்னர் கோயில் முழுமையாக இடம் மாற்றம் செய்யப்படும் என கூட்டரசு அமைச்சர் Hannah Yeoh தெரிவித்தார். கடந்த 2025 செப்டம்பர் 17 தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் புதிய கட்டிடத்திற்கான ஒப்புதல் வழங்கியதாகவும் டிசம்பர் 5இல் வழிபாட்டுத் தலமாக அந்த நிலம் சட்டப்பூர்வமாக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் இவ்வாண்டு ஜனவரி 14 கோயில் கட்டுவதற்கான அனுமதியைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் வழக்கியதாக கூட்டரசு அமைச்சர் Hannah Yeoh தெரிவித்தார்.
எந்தவொரு விவகாரமாக இருந்தாலும் சட்டப்படி செயல்படுவதற்கு அதற்கான கால அவகாசம் இருக்கும் என்றாலும் முறையான விண்ணப்பங்களின் மூலம் மட்டுமே இந்த செயல்முறை இலகுவாகிடவில்லை, மாறாக முன்னாள் கூட்டரசு அமைச்சர் Datuk Seri Dr. Zaliha Mustafa, கோலாலம்பூரின் முன்னாள் மேயர் Datuk Seri Maimunah Sharif அவர்களுடன் இதனை சுமூகமாகக் கையாண்ட மனிதவள அமைச்சர் Datuk Seri Ramanan, இலக்கவியல் அமைச்சர் Gobind Singh Deo, ஒற்றுமை துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோருக்கும் கூட்டரசு அமைச்சர் Hannah Yeoh தனது நன்றியைத் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



