நிலத்தைத் திருடிய கோயிலுக்கு அரசு நிலமா? சர்ச்சையைக் கிளப்பிய ZAMRI VINOTH!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 20,

தலைநகரில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கான புதிய நிலம் தயார்நிலையில் உள்ளதாகப் பிரதமர் துறை கூட்டரசு அமைச்சர் Hannah Yeoh நேற்று தெரிவித்ததைச் சர்ச்சைக்குரிய மத போதகரான ZAMRI VINOTH கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்த கோயில்களுக்கு YB AMOI தனது சொந்த நிலத்தைத் தரவேண்டுமே தவிர அரசு நிலத்தைத் தர வேண்டியதில்லை என ZAMRI VINOTH தெரிவித்துள்ளார். அரசு நிலத்தைத் திருடி ஆக்கிரமித்தால் அவர்களுக்கு அரசு நிலம் இலவசமாக வழங்கப்படுவதைத் தான் YB AMOI-யின் கிறுஸ்துவ மதமும் ஜீசஸும் கற்பிக்கிறார்களா என ZAMRI VINOTH கேள்வி எழுப்பியிருப்பது சமூக வலைத்தலங்களில் பரவி வருகிறது.

கோபிந்த் சிங் அமைச்சராக இருப்பதால் கோயில்கள் அரசு அனுமதியின்றி கட்டினாலும் சட்டத்தை மீறி அமைச்சரவையில் கோபிந்த் சிங் கோயில் ஹராம்களைப் பாதுகாப்பார் என ZAMRI VINOTH குற்றம்சாட்டினார். இனி கோயில்கள் சட்டத்தைப் பின்பற்ற வேண்டியதில்லை. நீங்கள் நிலத்தை ஆக்கிரமியுங்கள் கடவுள் பெயரைப் பயன்படுத்தி அடுத்தவர் நிலத்தை அபகரியுங்கள். உங்களுக்காகக் கோபிந்த் சிங் அரசாங்கத்திடமிருந்து இலவசமாக நிலத்தை வாங்கிக் கொடுப்பார்கள் என்றும் அமைச்சர்கள் முட்டாள்களின் எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் ZAMRI VINOTH கடுமையாகச் சாடியுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *