கோயில்களைப் பாதுகாக்கக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது! பாப்பாராய்டு வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

மே 11,

சிலாங்கூரில் உள்ள இந்து சமய வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைத் தவிர்க்க சிலாங்கூர் மாநில அரசு கோயில் நிர்வாகத்தினர்களிடம் தொடர்ந்து சந்திப்புக் கூட்டங்களை நடத்தி வருகிறது. நேற்று காலை சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு அலுவலகத்தில் கேரித் தீவு கோயில், ஹுலூ லங்காட்டில் அமைந்திருக்கும்  Sri Karumariamman கோயில் நிர்வாகத்தினருடன் சந்திப்புகளை நடத்தி கலந்துரையாடியதாக வீ.பாப்பராய்டு தெரிவித்தார்.


அதன் பின்னர் தொடர்ச்சியாக BATU TIGA, டெங்கில் Sri Naga Poosanni கோயில் நிர்வாகத்தினருடன் சுமூகமானக் கலந்துரையாடல்கள் நிகழ்ந்ததாகவும் குறிப்பாக ரவாங்கின் இந்து மயானம் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகளையும் ஆராய்ந்து வருவதாகவும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு தெரிவித்தார். அனைத்து சமூகங்களுக்குமான அரசாகச் சிலாங்கூர் அரசு திகழ்வதாகவும் கோயில் விவகாரங்களில் சுமூகமானத் தீர்வை வழங்க சிலாங்கூர் அரசு முன்னெடுப்புகளைச் செய்து வருவதாகவும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு நம்பிக்கை தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *