குடியிருப்புப் பகுதிகளில் கோயில்களுக்குத் தனி நிலம் அவசியம் இல்லை! பாஸ் கட்சி சர்ச்சை!

top-news
FREE WEBSITE AD

ஜூன் 26,

சிலாங்கூரில் புதிதாகக் கட்டப்படும் குடியிருப்புப் பகுதிகளில் கோயில்கள் அமைக்கப்பட வேண்டும் என கட்டுமான நிறுவனங்களைச் சிலாங்கூர் அரசு கட்டாயப்படுத்துவதாகப் பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Ahmad Fadhli Shaari குற்றம் சாட்டினார். புதிய கட்டுமானங்களில் கோயில்களுக்கு என நிலம் ஒதுக்குவது அவசியமற்றது என்றும் மலேசிய இறையாண்மைக்கு ஏற்ப இஸ்லாமிய வழிபாட்டுத் தலம் மட்டும் இருந்தால் போதும் என Ahmad Fadhli Shaari தெரிவித்துள்ளார். 

முன்னதாகச் சிலாங்கூர் அரசு சிலாங்கூரில் புதிதாகக் கட்டப்படும் குடியிருப்புப் பகுதிகளில் கோயில்களுக்கும் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் இது அரசு குடியிருப்புத் திட்டமாக இருந்தாலும் சரி தனியார் குடியிருப்புத் திட்டமாக இருந்தாலும் சரி, கோயில்களுக்கு என நிலத்தை ஒதுக்கப்பட வேண்டும் என அரசாணையை வெளியிட்டது. இந்த அரசாணையால் கட்டுமான நிறுவனங்களுக்கு மேலும் சுமையாக இருக்கும் என்றும், இதனால் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையிலான வீடுகளைக் கட்ட முடியாத சூழல் ஏற்படும் என Ahmad Fadhli Shaari தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *