குலசேகரன் பதவி விலக வேண்டும்! பாஸ் கட்சியும் அம்னோவும் வலியுறுத்து!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 18,

பிரதமர் துறையின் சட்ட நிர்வாகச் சீர்த்திருத்த அமைச்சின் துணை அமைச்சராக இருக்கும் குலசேகரன் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என அம்னோ உலாமாவின் துணைத் தலைவர் Datuk Dr Khairuddin Takiri வலியுறுத்தியதைத் தொடர்ந்து பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவரான Ahmad Fadhli Shaariயும் குலசேகரன் சட்டத்துறையின் துணை அமைச்சராக இருக்க தகுதியற்றவர் என்பதால் அவரைப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். 

முன்னதாக அருண்துரைசாமி எனும் சமூக ஆர்வலர் இஸ்லாத்திற்கு எதிரானக் கருத்தைச் சமூகவலைத்தலத்தில் பதிவேற்றியதாக நீதிமன்றத்தில் ஆஜரான போது நீதிமன்ற வாசலில் துணை அமைச்சர் குலசேகரன் அருண்துரைசாமியை வரவேற்றார். ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் ஒருவர், அதிலும் இஸ்லாத்தை இழிவுப்படுத்தியதாகக் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ஆடவரைத் துணை அமைச்சர் குலசேகரன் நீதிமன்ற வாசலில் வரவேற்பது தேவையற்றது என்றும் துணை அமைச்சர் பொறுப்பிலிருக்க குலசேகரனுக்குத் தகுதியில்லை என பாஸ் கட்சியின் Ahmad Fadhli Shaari தெரிவித்துள்ளார். 

நேற்று இச்சம்பவம் குறித்து விளக்கமளித்த துணை அமைச்சர் குலசேகரன், நீதிமன்றத்தில் தாம் இருந்த போது அருண்துரைசாமியைக் கண்டதாகவும் அவருடன் பேசியதாகவும் இயல்பான ஓர் உரையாடலாகவே அது அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *