13 வாகனங்களை மோதிய லாரி! கூலிமில் பரபரப்பு!
- Thinagaren Sanggaren
- 11 Jun, 2024
Butterworth
Kulim விரைவு
சாலையில் 13 வாகனங்களை மோதி trailer லாரி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயம்
அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7.30 மணியளவில் Butterworth லிருந்து Kulim க்குச் சென்ற லாரியின் பிரேக் செயலிழந்தால்
இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக லாரி ஓட்டுநர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விபத்தில் சிக்கிய 13 வாகன ஓட்டுநர்களில் நால்வர்
தற்போது KULIM மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விபத்திற்குக்
காரணமான லாரி ஓட்டுநரைப் போலிசார் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட விபத்தில் எந்தவோர் உயிர் சேதமும்
ஏற்படவில்லை என Kulim மாவட்ட மீட்புப் படை தலைமை ஆணையர் Hamizul Azwan Hamdan உறுதிப்படுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



