ஈரானில் கருப்பு மழை, அணு ஆயுதத்தை விட ஆபத்து? உலக சுகாதார அமைப்பு கடும் எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கருப்பு நிறத்தில் எண்ணெய் பிசுபிசுப்புடன் கூடிய மழை பெய்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்புக் கிடங்குகள் இலக்கு வைக்கப்பட்டன. இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட பிரம்மாண்ட தீ விபத்துகளின் காரணமாக, வளிமண்டலத்தில் அதிகப்படியான கரியமிலத் துகள்கள், ஹைட்ரோகார்பன்கள் மற்றும் நச்சுப் புகைகள் கலந்ததே இந்த நிறமாற்றத்திற்குக் காரணமாக அமைந்தது.

இந்த விசித்திரமான மழைப்பொழிவு குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) பொதுமக்களுக்குக் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த மழையில் கலந்துள்ள நச்சு வேதிப்பொருட்கள் மற்றும் அமிலத்தன்மை காரணமாக சுவாசப் பிரச்சனைகள், தோல் எரிச்சல் மற்றும் கண் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால், மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, ஈரான் நாட்டு அதிகாரிகள் மக்கள் முகக்கவசம் அணியுமாறும், ஜன்னல்களை மூடி வைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். வளிமண்டலத்தில் கலந்துள்ள இந்தப் நச்சுப் புகைகள் மழை நீருடன் சேர்ந்து நிலத்தடி நீரையும், மண்ணையும் மாசுபடுத்தும் அபாயம் உள்ளதால் இது ஒரு சுற்றுச்சூழல் பேரிடராகப் பார்க்கப்படுகிறது. காற்றின் திசையைப் பொறுத்து இந்தத் நச்சு மேகங்கள் அண்டை நாடுகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *