‘தலைமைப் பண்புக்குத் தகுதி கிடையாது’ – விஜய் சேதுபதி கருத்தை சுட்டிக்காட்டிய மேயர் பிரியா
- Surendran Sumdraraj
- 25 Sep, 2026
சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசு மற்றும் முதலமைச்சர் விஜயின் செயல்பாடுகள் குறித்து சென்னை மேயர் பிரியா ராஜன் விமர்சனம் முன்வைத்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், நடிகர் விஜய் சேதுபதி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த கருத்தையும் சுட்டிக்காட்டினார்.
த.வெ.க. அரசு பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் சட்டம்-ஒழுங்கு, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், மின்வெட்டு, மின் கட்டண உயர்வு மற்றும் ஆவின் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக பிரியா குற்றஞ்சாட்டினார். மேலும், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதையும், சென்னை விமான நிலையத்தை தனியார் வசம் ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கையையும் அவர் விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி பேசியதாக கூறப்படும் கருத்தை மேற்கோளாக எடுத்த பிரியா, “தலைவர் என்றால் என்னவென்று தெரியாமல், கொள்கையை உணராமல், வாக்குறுதிகளை அளித்துவிட்டு பிரச்சினைகள் வந்தபோது எதிரணியைக் குறை கூறுவது தலைமைப் பண்புக்கான தகுதி அல்ல; அது ஏமாற்று வேலை” என்று தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



