சிலாங்கூரில் பன்றி பண்ணை உரிமம் இனி இல்லை: உள்ள பண்ணைகள் மூடப்படும்-மந்திரி பெசார்
- Tamil Malar (Reporter)
- 12 Feb, 2026
ஷா ஆலாம், பிப். 12-
சிலாங்கூர் மாநிலத்தில் இனி பன்றி வளர்ப்பு உரிமங்கள் வழங்கப்படாது என்றும், தற்போது இயங்கி வரும் பன்றி பண்ணைகளை மூடும் நடவடிக்கைகள் மேலும் வேகப்படுத்தப்படும் என்றும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதீன் ஷாரி தெரிவித்தார்.
மக்களுக்கு தற்போது பாதிப்பை ஏற்படுத்தும் இந்த விவகாரம் தொடர்பாக மாநில நிர்வாகக் குழு கூட்டம் (MMKN) மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.
மேலும், சிலாங்கூர் சுல்தான் அண்மையில் வெளியிட்ட அரசாணையில், சிலாங்கூரின் எந்த மாவட்டத்திலும் பன்றி வளர்ப்பு நடைபெறுவதை தாம் அனுமதிக்கவில்லை என கூறியதற்கு மாநில அரசு முழுமையான மரியாதை செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஜனவரி மாதம் முதல் மாநில அரசு பன்றி வளர்ப்பு உரிமங்களை வழங்குவதை நிறுத்திவிட்டது. மேலும், கடந்த மாதம் சுல்தான் வெளியிட்ட கட்டளையின்படி, கோலா லாங்காட் மாவட்டத்தின் தஞ்சோங் செப்பாட் பகுதியில் உள்ள தற்போதைய பண்ணை இடங்களைக் காலி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறோம்,” என அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



