பழுதுபார்ப்பு முடிந்தது: கோத்தா கினாபாலு சர்வதேச விமான நிலைய ஓடுதளம் மீண்டும் திறப்பு
- Surendran Sumdraraj
- 18 Sep, 2026
கோத்தா கினாபாலு, செப். 18-
கோத்தா கினாபாலு சர்வதேச விமான நிலையத்தின் (KKIA) ஓடுதளம், பழுதுபார்ப்பு மற்றும் பாதுகாப்பு ஆய்வு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று இரவு 11 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
மலேசியா ஏர்போர்ட்ஸ் நிறுவனம் தனது பேஸ்புக் பதிவின் மூலம் இதனை உறுதிப்படுத்தியது. இறுதி கட்ட பாதுகாப்பு சோதனையில் ஓடுதளம் மீண்டும் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பான நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
“கோத்தா கினாபாலு சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் அங்கு வருகை தரும் பயணிகள், தங்களது விமான நிறுவனங்களிடம் விமான சேவையின் தற்போதைய நிலை மற்றும் சமீபத்திய தகவல்களை சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என மலேசியா ஏர்போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஓடுதளத்தில் அவசர பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் KKIA ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டது. எனினும், தொடர்ந்து பெய்த மழை காரணமாக பழுதுபார்ப்பு பணிகளின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த தற்காலிக மூடல் காரணமாக மொத்தம் 20 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



