தலைநகரில் வாகனங்களை மோதி கைகலப்பில் ஈடுபட்ட கும்பல்!

- Sangeetha K Loganathan
- 30 Jan, 2025
ஜனவரி 30,
கும்பல்களுக்கிடையில் கைகலப்பும் வாகனங்கள் சரமாரியாக ஆட்களைத் தாக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தளங்களில் பரவியது தொடர்பாகக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாக Brickfields மாவட்டக் காவல் ஆணையர் Ku Mashariman Ku Mahmood தெரிவித்தார்.
கட்டிடத்தின் பார்கிங்கிலிருந்து Toyota Hilux, Toyota Vios ரக வாகனங்களைக் கும்பலாகப் பலர் தாக்கும்படியும் இரு வாகனமும் கும்பலை மோதும்படியாகவும் காணொலி பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் வாகனம் மோதியதில் இருவர் காயத்திற்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் Brickfields மாவட்டக் காவல் ஆணையர் Ku Mashariman Ku Mahmood தெரிவித்தார்.
கலவரத்தில் ஈடுப்பட்ட கும்பலைச் சேர்ந்தவர்களைக் காவல் துறையினர் அடையாளம் கண்டிருப்பதாகவும் சம்பவம் தொடர்பாக விவரங்கள் தெரிவிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Polis Brickfields menyiasat pergaduhan serta insiden langgar lari melibatkan Toyota Hilux dan Toyota Vios. Insiden itu menyebabkan dua individu cedera. Polis telah mengenal pasti suspek dan meminta orang ramai memberikan maklumat mengenai kejadian tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *