போலிசாரை மோதிய வாகனம்! காவல் அதிகாரி படுகாயம்!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 13,

சாலையில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த காவல் அதிகாரியை மோதிய அடையாளம் தெரிய வாகனத்தைக் காவல்துறை தேடி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தலைநகர் Jalan Sultan Yahya Petra சாலையில் பணியிலிருந்த 27 வயது காவல் அதிகாரியை மர்ம வாகனம் மோதியதாகக் கோலாலம்பூர் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் Mohd Zamzuri தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட 27 வயதான  Roslan bin Salleh எனும் காவல் அதிகாரி மேலதிக சிகிச்சைக்காகக் கோலாம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கோலாலம்பூர் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் Mohd Zamzuri தெரிவித்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் தொடர்பான விசாரணையைக் காவல்துறையிநர் மேற்கொண்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட காவல் அதிகாரியிடம் வாகனம் குறித்து தகவல்கள் பெற்றிருப்பதாகவும் கோலாலம்பூர் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் Mohd Zamzuri தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *