மாணவர்களே, வெளிப்புறச் செயல்பாடுகள் வேண்டாம்! உயர்கல்வி அமைச்சு வலியுறுத்து!

- Sangeetha K Loganathan
- 27 Nov, 2024
நவம்பர் 27,
வெளிப்புற நடவடிக்கைகளில் பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்பதைத் தவிர்க்கும்படி உயர்கல்வி அமைச்சர் Datuk Seri Dr Zambry Abdul Kadir வலியுறுத்தினார். பருவமழையின் காரணமாகப் பேரிடர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் ஆறுகள், காடுகள், மலைகள் போன்ற வெளிப்புறச் செயல்பாடுகளைத் தவிர்க்கும்படி அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய நிலையில் பல்கலைக்கழகங்களும் அனுமதியை வழங்க வேண்டாம் என்றும், முன்னமே வழங்கப்பட்ட அனுமதியையும் ரத்து செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
மழைக்காலம் என்பதால், இந்த முன்னெச்சிரிக்கை நடவடிக்கைக்கு மாணவர்களும் பல்கலைக்கழகமும் ஒத்துழைக்கும் என தாம் நம்புவதாகவும், பருவ நிலை சீரானப் பின்னர் வெளிப்புறச் செயல்பாடுகளை முன்னெடுக்கும்படி அவர் தெரிவித்தார்.
Institut pengajian tinggi awam dan swasta diingatkan agar tidak membenarkan pelajarnya menjalankan sebarang aktiviti luar, termasuk di air, sempena musim Monsun Timur Laut (MTL). Menteri Pendidikan Tinggi, Datuk Seri Dr Zambry Abdul Kadir, menegaskan langkah berjaga-jaga perlu diambil untuk mengelakkan kejadian tidak diingini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *