தாவாவில் திடீர் வெள்ளப்பெருக்கு! ஒருவர் மரணம்!

top-news
FREE WEBSITE AD

தாவாவ்: தாவாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து நேற்று இரவு 9.34 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக, தாவாவ் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர், தீயணைப்பு கண்காணிப்பாளர் ஜெமிஷின் உஜின் தெரிவித்தார்.

எஸ்.யு.வி ரக வாகனம் ஒன்று இரண்டு மோட்டார் சைக்கிள்களை ஏற்றிக்கொண்டு, வெள்ளம் பெருக்கெடுத்த சாலையை கடக்க முயன்றபோது, வலுவான நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.

அந்த வாகனத்தில் இரண்டு பேர் பயணித்ததாகவும், மேலும் இரண்டு பேர் அந்த வாகனத்தின் பின்பகுதியில் ஏற்றிச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள்களில்  இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதில் மூவர் தங்களைக் காப்பாற்றிக் கொண்ட நிலையில், 30 வயது நபர் என்று கருதப்படும் ஒரு ஆண் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 7.15 மணியளவில், சம்பவ இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள தோட்டப்பகுதியில், ஓர் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது உயிரிழந்தவரின் உடல் என உறுதி செய்யப்பட்டதாகவும் ஜெமிஷின் கூறினார்.

உடல் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரால் மீட்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இன்று காலை 8.44 மணிக்கு முழுமையாக நிறைவடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *