கேமரன் ஹைலேண்ட்ஸில் திடீர் வெள்ளம்!

FREE WEBSITE AD

கோலாலாம்பூர், செப் 12: நேற்று மதியம் சுமார் மூன்று மணி நேரம் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து, கேமரன் ஹைலேன்ட்ஸ் (Tanah Rata) பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது; இதனால் பல வீடுகள் பாதிக்கப்பட்டன.

கோல்டன் ஹில்ஸ் (Golden Hills) குடியிருப்புப் பகுதி மற்றும் மார்டி (Mardi) வேளாண் தொழில்நுட்பப் பூங்காவிற்கு அருகிலும் வெள்ளம் ஏற்பட்டதாக தானா  ரத்தா சட்டமன்ற உறுப்பினர் ஹோ சி யாங் (Ho Chi Yang) தெரிவித்தார்.

இதுவரை காயங்கள் அல்லது பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை என்று அவர் கூறினார். 

சுமார் ஐந்து முதல் ஆறு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில வீடுகளில் சோபாக்கள் மற்றும் தளபாடங்கள் சேதமடைந்துள்ளன  என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக கோல்டன் ஹில்ஸ் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில், அருகிலுள்ள ஆறு மற்றும் அடைபட்ட வடிகால் அமைப்புகள் காரணமாக இந்த வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என்று ஹோ கூறினார். 

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஏற்பட்ட வெள்ளத்தை விட இது மிகவும் தீவிரமானதாக இருந்தது.

ஜலான் டெங்கோலோக் (Jalan Tengkolok) பகுதியில் சிறிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் தகவல் கிடைத்தது; எனினும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்தச் சாலை அதிகம் பயன்படுத்தப்படாத ஒன்று என்று ஹோ தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கக்கூடிய உதவிகள் குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பதாகவும், அப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் வடிகால்களில் அடைப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஹோ கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *