ஷா ஆலமில் திடீர் வெள்ளம்! நிலைமை சீரடைகிறது!

top-news

ஷா ஆலம், செப் 26: நேற்று பிற்பகல் 2 மணி முதல் தொடர்ந்து பெய்த கனமழையால், ஷா ஆலம் ஜாலான் கெபூன், ஸ்ரீ முடா மற்றும் கோத்தா கெமுனிங்கைச் சுற்றியுள்ள பல தாழ்வான பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

இதனை அடுத்து சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) அகமது முக்லிஸ் மொக்தார் குழு ஜாலான் கெபுனில் நிலைமையை கண்காணித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஆண்டலாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து ஒரு குழு கோத்தா கெமுனிங்கிற்கு அனுப்பப்பட்டது

இதுவரை, நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், எந்த ஒரு வெளியேற்றமும் செய்யப்படவில்லை என்பதோடு, தண்ணீரின் அளவும் குறைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வெள்ள பாதிப்பால் ஏராளமான வாகனங்களும் வெள்ளத்தில் சிக்கின!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்