புத்ராஜெயாவில் திடீர் வெள்ளம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 24: நேற்று பிற்பகல் பெய்த கனமழையைத் தொடர்ந்து புத்ராஜெயாவின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது, ஆனால் பெரிய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.

தகவல்கள் கிடைத்ததை அடுத்து, பிரிவு 7 மற்றும் 14-ல் உள்ள தீயணைப்பு நிலையங்கள் பல முக்கிய இடங்களைக் கண்காணிக்க ரோந்து  குழுக்களை அனுப்பியதாக புத்ராஜெயா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாடுகளின் உதவி இயக்குநர் ஹாசிக் ஹாஸ்மி கூறினார்.

'அலமண்டா மால்' பகுதியைச் சுற்றி நீர் மட்டம் உயர்ந்து வருவதாகத் தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து, நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதையும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பதையும் உறுதி செய்வதற்காக உடனடி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

வெள்ளம் வர வாய்ப்புள்ள பகுதிகளில் வடிகால் அமைப்புகள் மற்றும் நீர் மட்டங்களும் ஆய்வு செய்யப்பட்டன. புத்ராஜெயா கட்டளை மையத்துடன் இணைந்து சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக  அவர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *