செப்டம்பர் 1 முதல் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை! - பினாங்கு மாநிலத்தில் அமலுக்கு வருகிறது

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன், ஏப் 2: Penang மாநிலம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு முழுமையான தடை விதிக்க உள்ளது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி இந்தப் பைகளை பயன்படுத்த அனுமதிக்கப்படும் கடைசி நாளாக இருக்கும் என்று மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் குழு தலைவர் Sundarajoo Somu தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31 தாம் தேதி அறிவிக்கப்பட்ட இந்தக் கொள்கை தற்போது விழிப்புணர்வு கட்டத்தில் உள்ளது. வரும் மாதங்களில் இது அமலாக்க கட்டத்திற்குச் செல்லும் என அவர் கூறினார்.

இந்தத் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால், இவ்வகை பைகளின் 100% பயன்பாட்டை நிறுத்தும் நாட்டின் முதல் மாநிலமாக பினாங்கு மாறும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், Penang Green Council மற்றும் உள்ளூர் நிர்வாகங்களின் மூலம் மறுசுழற்சி செய்யப்பட்ட பைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மொத்தம் 1 லட்சம் பைகள் விநியோகிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை சுமார் 45,000 பைகள் சந்தைகள் மற்றும் பொது நிகழ்வுகளில் வழங்கப்பட்டுள்ளன.

 பிளாஸ்டிக் பைகளைப் போலவே தோற்றமும் பயன்பாடும் கொண்ட, ஆனால் எளிதில் கரையக்கூடிய (biodegradable) பைகள் தற்போது பரவலாக கிடைக்கின்றன. இவை சில வாரங்களிலேயே மண்ணில் கரைந்து விடும் என்று அவர் கூறினார்.

இந்தத் தடை படிப்படியாக அமல்படுத்தப்படும். முதலில் மென்மையான அணுகுமுறை பின்பற்றப்பட்டு, கடைசி மூன்று மாதங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும்.

விதிமுறைகளை பின்பற்றாத வணிகர்களுக்கு வர்த்தக உரிமம் புதுப்பிப்பில் சிக்கல் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

தண்டிப்பது நோக்கம் அல்ல; விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவதை உறுதி செய்வதே முக்கியம்  என அவர் மேலும் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *