‘த.வெ.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு படுபாதாளத்திற்குச் செல்கிறது’ – வானதி சீனிவாசன்

top-news
FREE WEBSITE AD

சென்னை, செப். 10 –

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை மேலும் மோசமடைந்து வருவதாக பா.ஜ.க. முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் கந்துவட்டி தகராறு காரணமாக தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று காவல்துறையில் புகார் அளித்ததாகக் கூறப்படும் பிரதீப் ராஜ் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த இளைஞர் காவல் ஆய்வாளர் ஒருவர் மீதும் குற்றச்சாட்டு முன்வைத்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளதால், இந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என்றும் வானதி கூறினார்.

உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்த பின்னரும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை காவல்துறை எந்த அளவுக்கு உறுதி செய்கிறது என்ற கேள்வியை எழுப்புவதாக அவர் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *