தாய்லாந்துக்கு அரசு பயணம் மேற்கொண்ட அன்வார்!

top-news

ஏப்ரல் 17,

தாய்லாந்துக்கும் மலேசியாவுக்குமான உறவை மேம்படுத்த மலேசிய பிரதமர் Datuk Seri Anwari Ibrahim இன்று தாய்லாந்துக்கு 2 நாள்கள் அரசு முறை பயணத்தை மேற்கொண்டார். இன்று நண்பகல் 1.20 மணிக்கு தாய்லாந்தின் ராணுவப் படையின் விமான நிலையத்திற்கு வந்தடைந்த அன்வாரைத் தாய்லாந்து துணைப் பிரதமர் Suriya Juangroongruangkit வரவேற்றார். 

பிரதமர் அன்வாருடன் முதலீடு வர்த்தகத் தொழில்துறை அமைச்சர் Tengku Datuk Seri Zafrul Abdul, பொதுப்பணித்துறை அமைச்சர் Datuk Seri Alexander Nanta Linggi. வெளியுறவுத் துறை தலைமைச் செயலாளர் Datuk Seri Amran Mohamed Zin அகியோர் இணைந்து தாய்லாந்து பயணத்தை மேற்கொண்டனர். பிரதமர் அன்வார் தாய்லாந்து பிரதமர் Paetongtarn Shinawatra உடனானச் சந்திப்பில் முக்கிய அம்சங்களை விவாதிக்கவிருப்பதாகவும் இரு நாடுகளுக்குமிடையிலான வணிக மூலதனப் பங்காளித்துவம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Perdana Menteri Anwar Ibrahim memulakan lawatan rasmi dua hari ke Thailand bagi memperkukuh hubungan dua hala. Beliau disambut oleh Timbalan Perdana Menteri Thailand dan dijangka berbincang mengenai pelaburan serta kerjasama perdagangan antara kedua-dua negara.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *