கார் பார்க்கிங்கில் தவறி விழுந்து முதியவர் மரணம்!

- Muthu Kumar
- 06 Dec, 2024
கோலாலம்பூர், டிச 6:
சரவாக்கின் கூச்சிங்கில் புதன்கிழமை இரவு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கார் பார்க்கிங்கில் இருந்து ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
உள்ளூர் போலீஸ் தலைமை உதவி கமிஷனர் முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா இன்று ஓர் அறிக்கையில் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
பாதிக்கப்பட்டவர் 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.இரவு 10.43 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், சம்பவ இடத்திற்கு வந்தபோது, அதிகாரிகள் அந்த நபர் மயக்கத்தில் கிடந்ததை கண்டதாகவும் அவர் கூறினார்.
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட அவசர உதவியாளர்கள் அந்த நபரின் மரணத்தை உறுதிப்படுத்தினர். அவரது உடல் சரவாக் பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *