பேரக்குழந்தைகளை மீட்கச் சென்ற முதியவர் கடலில் மூழ்கி பலி!

top-news
FREE WEBSITE AD

பாச்சோக், பிப் 8: இன்று காலை பந்தாய் இராமாவில் பலத்த அலைகளில் சிக்கிய தனது இரண்டு பேரக்குழந்தைகளை மீட்க முயன்ற ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காலை 9.30 மணியளவில் கோத்தா பாருவில் உள்ள கம்போங் பாயா செனாங்கைச் சேர்ந்த 63 வயதான ரோஸ்லி யூசோஃப், தனது மனைவி, மகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகளுடன் கடற்கரைக்குச் சென்ற வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பேரக் குழந்தைகள் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தபோது  பலத்த அலைகள் மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக திடீரென்று அடித்துச் செல்லப்பட்டனர்.

இதனை அடுத்து சம்பந்தப்பட்ட முதியவர்  தனது பேரக்குழந்தைகளைக் காப்பாற்ற கடலுக்குள் சென்றபோது அலைகளால் உள்ளிழுக்கப்பட்டார்.

மற்ற அனைவரும் பாதுகாப்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டனர்.

இந்த துயரத்தின் அடிப்படையில், மழைக்காலங்களில் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளத!. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *