குப்பையில் குடியிருக்கும் மூதாட்டி! - ஜொகூரில் அதிர்ச்சி
- Shan Siva
- 11 Feb, 2026
ஜொகூர் பாரு, பிப் 11: ஜாலான்
கெம்பாஸ் பாரு அருகிலுள்ள தாமான் செத்தியா ட்ரோப்பிகா பகுதியில் புதருக்குள்
குப்பைகள் குவித்து அமைக்கப்பட்ட தற்காலிக குடிசையில் மூதாட்டி ஒருவர் கடந்த
இரண்டு வாரங்களாக வசித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாமான் கெம்பாஸ் இண்டா பகுதியைச் சேர்ந்த
ஷாம்சுல் ஃபாத்ரி இஸ்மாயில் என்ற ஒரு நபர்
இந்த நிலைமை மனதை நெகிழவைக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளதான
NST செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த வழியாகச் செல்லும் போது குப்பைகள்
குவிந்திருந்ததை கவனித்தேன். ஆனால் அதன் நடுவில் ஒருவர் வசிப்பார் என்று நினைக்கவே
இல்லை. குப்பைகளுக்குள் படுத்திருந்த அவரைக் காணும் போது அதிர்ச்சியடைந்தேன் என்று
அந்த நபர் தெரிவித்துள்ளார்.
அந்த பெண் பேச மறுத்ததால், அவர் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை சேகரிப்பவரா அல்லது
உண்மையிலேயே வீடற்றவரா என்பது தெளிவாக இல்லை. அவரது அடையாளமும் இதுவரை தெரியவில்லை;
அவர் உள்ளூர் நபரா அல்லது வெளிநாட்டவரா என்பதும் உறுதி
செய்யப்படவில்லை.
இந்த நிலைமை குறித்து கவலை கொண்ட
ஷாம்சுல், சமூக நலத்துறைக்கு புகார் அளித்து உடனடி
நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அந்த இடம் வாழ்வதற்கு முற்றிலும்
ஏற்றதல்ல. அவரை அங்கு விட்டுவிடுவது உயிருக்கு ஆபத்தாகவும், கொசு
மற்றும் எலி போன்றவற்றால் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கும் என்றார்.
நிகழ்விடத்தில் மேற்கொள்ளப்பட்ட
பார்வையில், பிளாஸ்டிக், கார்ட்போர்டு
மற்றும் கைவிடப்பட்ட உடைகள் கொண்டு சுவர்களும் கூரையும் அமைக்கப்பட்ட தற்காலிக
குடிசை காணப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து ஜொகூர் மகளிர்,
குடும்ப மற்றும் சமூக நல மேம்பாட்டு குழுத் தலைவர் கைரின்-நிசா இஸ்மாயிலுக்கு
தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு விசாரணை
நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



