PN தலைவரா? எனக்கு வேண்டாம்... திரெங்கானு மந்திரி பெசார்தான் சரி! - சனூசி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 2: பாஸ் தேர்தல் இயக்குநர் சனுசி நோர் அடுத்த பெரிகாத்தான் நேஷனல் தலைவராக வருவதில் ஆர்வமில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் கட்சியின் துணைத் தலைவர் அஹ்மத் சம்சூரி மொக்தாரை அந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.

அதிக தகுதியான வேட்பாளர்கள் உள்ளனர். திரெங்கானு மந்திரி புசார் சம்சூரியை நான் முன்மொழிகிறேன் என்று அவர் கூறினார்.

நேற்று, சனுசி, பெரிக்காத்தானின் அடுத்த  தலைவராக நியமிக்க பாஸ் உலமா பிரிவுத் தலைவரின் ஆசியைப் பெற்றார்.

சனுசியை ஆதரித்துப் பேசிய அவர், அரசியலில் சனூசி  நல்ல புரிதல் கொண்டவராகவும் இருப்பதாக அஹ்மத் யஹாயா கூறினார்.

சனுசி நன்கு அறியப்பட்டவர், அணுகக்கூடியவர் மற்றும் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் என்றும் அவர் கூறினார்.

செவ்வாயன்று, PAS துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் மற்றும் சம்சூரி ஆகியோர் இந்தப் பதவிக்கு பரிசீலிக்கப்படும் பெயர்களில் இருப்பதாக FMT செய்தி வெளியிட்டது! 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *