குவா முசாங்கில் 2,000 யாபா மாத்திரைகள் பறிமுதல் – 49 வயது நபர் கைது

top-news
FREE WEBSITE AD

குவா முசாங், செப். 29-

 குவா முசாங்–குவாலா லிப்பிஸ் சாலையின் 18-வது கிலோமீட்டரில் வாகன சோதனையின் போது, யாபா போதை மாத்திரைகள் என சந்தேகிக்கப்படும் 2,000 மாத்திரைகள் வைத்திருந்த 49 வயது ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குவா முசாங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன் சிக் சூன் ஃபூ கூறுகையில், மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் ரோந்து வாகனப் பிரிவு உறுப்பினர்கள் நேற்று மாலை 6 மணியளவில் அப்பகுதியில் சாலைத் தடுப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமான காரை நிறுத்தி சோதனை செய்ததாகத் தெரிவித்தார்.

வாகனத்தை சோதனையிட்டபோது, சுமார் 200 கிராம் எடையுள்ள 2,000 யாபா மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் சந்தை மதிப்பு சுமார் RM30,000 என மதிப்பிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் மலேசியாவைச் சேர்ந்த 49 வயது ஆடவர் எனவும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட சிறுநீர் பரிசோதனையில் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு நேர்மறை முடிவு கிடைத்ததாகவும் சிக் சூன் ஃபூ கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *