கட்டிடத்திலிருந்து விழுந்த இளைஞர் மரணம்!

- Sangeetha K Loganathan
- 11 Mar, 2025
மார்ச் 11,
20 வயது இளைஞர் கட்டிடத்திலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூச்சிங்கில் உள்ள Jalan Wan Alwi வணிகச் சாலையில் உள்ள கட்டிடத்திலிருந்து ஆடவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பான அவசர அழைப்பை நள்ளிரவு 12.08 மணிக்குக் கிடைத்ததாகக் கூச்சிங் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Farhan Lee தெரிவித்தார்.
உயிரிழந்த ஆடவர் அன்றைய நாள் காலை மிகவும் இயல்பாக இருந்ததாகவும் அப்பகுதியில் அனைவரிடத்திலும் பரிட்சையமான நபர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக Mohd Farhan Lee தெரிவித்தார். இது தொடர்பானக் காணொலிகளைச் சமூகவலைத்தலங்களில் பரப்ப வேண்டாம் என Mohd Farhan Lee கேட்டுக்கொண்டார்.
Seorang lelaki tempatan maut selepas dipercayai terjatuh dari bangunan di Jalan Wan Alwi, Kuching. Polis menerima panggilan pada 12.08 pagi dan mengesahkan kematian mangsa. Kes diklasifikasikan sebagai mati mengejut dan orang ramai diminta tidak membuat spekulasi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *