லாரியின் பின் மோதிய வாகனம்! ஆடவர் உடல் நசுங்கி பலி!

- Sangeetha K Loganathan
- 01 Jan, 2025
ஜனவரி 1,
இன்று காலை கூலிம் சாலையின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த TRELER லாரியின் பின் மோதிய மைவி வாகனமோட்டி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். காலை 7.30 மணியளவில் விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் 9 மீட்பு ஆணைய அதிகாரிகள் மைவி வாகனமோட்டியின் உடலை மீட்டதாக Baling மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Mohd Jamil Mat Daud தெரிவித்தார்.
பழுதடைந்த TRELER லாரி சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் கட்டுப்பாட்டை இழந்த மைவி வாகனம் லாரியின் பின் மோதியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த ஆடவரின் அடையாளங்களைக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang lelaki maut selepas kereta Myvi yang dipandunya hilang kawalan dan melanggar treler rosak di tepi jalan di Kulim pagi tadi. Identiti mangsa masih disiasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *