அண்டை வீட்டாருடனானச் சண்டையில் ஆடவர் பலி! தாயும் மகனும் படுகாயம்!

top-news

ஏப்ரல் 7,

பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட வாக்குவாதம் கத்திக் குத்தாகியதில் 57 வயது ஆடவர் உயிரிழந்ததாகவும் தாயும் மகனும் படுகாயம் அடைந்ததாகவும் மாரான் மாவட்டக் காவல் ஆணையர் Wong Kim Wai தெரிவித்தார். நேற்று காலை 10.15 மணிக்கு Felda Jengka Dua குடியிருப்புவாசிகளிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்குக் காவல் அதிகாரிகள் விரைந்ததாக Wong Kim Wai தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் 57 வயது ஆடவர் ரத்த வெள்ளத்தில் மயங்கியிருந்த நிலையில் அவரை மருத்துமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றதாகவும் காயமடைந்திருந்த பெண்ணையும் அவரின் மகன் என நம்பப்படும் இளைஞரும் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களையும் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் சிகிச்சை பலனின்றி 57 வயது ஆடவர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் Wong Kim Wai தெரிவித்தார். சம்பவம் தொடர்பாகக் குடியிருப்புவாசிகளிடம் விசாரணையை மேற்கொண்டு வருவதாக Wong Kim Wai தெரிவித்தார்.

Seorang lelaki berusia 57 tahun maut, manakala seorang wanita dan anak lelakinya cedera parah selepas berlaku pertengkaran dengan jiran di Felda Jengka Dua. Mangsa disahkan meninggal dunia di hospital selepas menerima rawatan kecemasan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *