ஆபாசமாகப் புகைப்படம் எடுத்த ஆடவர் கைது! – காவல் துறை
- Sangeetha K Loganathan
- 19 Dec, 2024
டிசம்பர் 19,
அங்காடி கடையில் பொருள்களை வாங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை ஆபாசமாக ஆடவர் ஒருவர் கைத்தொலைப்பேசியில் புகைப்படம் எடுக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து கோலா லங்காட் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Akmalrizal Radzi விளக்கமளித்தார்.
பந்திங்கில் உள்ள அங்காடிக் கடையில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக அங்காடிக் கடையின் பணியாளரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் கடந்த டிசம்பர் 9, காவல்துறையில் புகாரளித்த நிலையில் மறுநாளே சந்தேக நபரான 30 வயது உள்ளூர் ஆடவரைக் கைது செய்து விசாரித்ததாகவும் கைது செய்யப்பட்ட ஆடவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் Mohd Akmalrizal Radzi தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட ஆடவர் தற்போது காவல்துறையின் தடுப்புக் காவலில் இருப்பதாகவும் முழுமையான விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கோலா லங்காட் மாவட்டக் காவல் ஆணையர் Mohd Akmalrizal Radzi விளக்கமளித்தார்.
Seorang lelaki tempatan ditahan selepas merakam gambar lucah seorang wanita di pasar raya Banting. Suspek mengaku bersalah dan kini dalam tahanan untuk siasatan sebelum dibawa ke mahkamah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



