PUTRA HEIGHTS வெடிப்பிற்குப் பொறுப்பேற்று மெந்திரி பெசார் பதவி விலக வேண்டும்! – பெரிக்காத்தான் சாடல்!

- Sangeetha K Loganathan
- 09 Apr, 2025
ஏப்ரல் 9,
PUTRA HEIGHTS எரிவாயு குழாய் வெடிப்புக்குப் பெறுப்பேற்று சிலாங்கூர் மெந்திரி பெசார் Dato’ Seri Amirudin Shari விடுமுறையில் செல்ல வேண்டும் என வலியுறுத்திய பாஸ் கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் Ahmad Fadhli Shaari, இப்போது சிலாங்கூர் மெந்திரி பெசார் விடுமுறையில் சென்றால் போதாது என்றும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார். PUTRA HEIGHTS பகுதியில் ஏற்பட்டுள்ள வெடிப்புச் சம்பவத்தை விசாரிக்க தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் விசாராணையை மேற்கொண்டாலும் அரசு துறையின் மீது எந்த தனிப்படையும் விசாரணை நடத்தாது என Ahmad Fadhli Shaari தெரிவித்தார்.
இந்த PUTRA HEIGHTS எரிவாயு குழாய் வெடிப்பில் மாநில அரசின் அலட்சியமானப் போக்கு மட்டுமே காரணம் என்பதால் விசாரணைக் குழுவின் மீது நம்பிக்கை இல்லை என்றும் விசாரணைகள் மெந்திரி பெசாரிடமிருந்து தொடங்க வேண்டும் என்றும் Ahmad Fadhli Shaari தெரிவித்தார். முன்னதாகத் தாம் Amirudin Shari விடுமுறையில் செல்ல வேண்டும் என தெரிவித்தது தவறு தான். அதற்காக நான் மன்னிப்பையும் கேட்கிறேன். ஏனெனில் உண்மையில் Amirudin Shari மெந்திரி பெசாராக இருக்க தகுதியற்றவர் என்பதால் பதவி விலக வேண்டும் என Ahmad Fadhli Shaari கடுமையாகச் சாடினார்.
PAS mendesak Menteri Besar Selangor, Dato’ Seri Amirudin Shari, letak jawatan susulan letupan paip gas di Putra Heights. Ahmad Fadhli Shaari menyalahkan kecuaian kerajaan negeri dan menuntut siasatan bermula dari kepimpinan Amirudin sendiri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *